படித்ததில் பிடித்தது (What’s app)

​🌼ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது. 
அதைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது.

.

🌼மெதுவாகப் போய் அந்தப் பாம்பைக் கையில் பிடித்து விட்டது. 
பாம்பும் குரங்கின் கையை இறுக்கமாகச் சுற்றிக் கொண்டது. விஷப் பல்லைக் காட்டி சீறியது . 
குரங்குக்குக் கொஞ்சம் பயம்

 வந்து விட்டது.
கொஞ்ச நேரத்திலேயே அதன் கூட்டமெல்லாம் கூடி வந்து விட்டன.
🌼ஆனாலும் யாருமே குட்டிக் குரங்குக்கு உதவ முன்வரவில்லை.
🌼”ஐயய்யோ. இது பயங்கரமான விஷமுள்ள பாம்பு . 

இது கொத்துனா உடனே மரணந்தான். 
குரங்கு பிடியை விட்டதுமே பாம்பு இவனப் போட்டுடும். இவன் தப்பிக்கவே முடியாது 
” என்று குட்டிக் குரங்கின் காதுபடவே பேசிவிட்டு ஒவ்வொன்றாகக் கலைந்து சென்று விட்டன .

*

🌼தன்னுடைய கூட்டமே தன்னைக் கைவிட்டு விட்ட சூழ்நிலையின் வேதனை , 
எந்த நேரமும் கொத்திக் குதறத் தயாராக இருக்கும் நச்சுப் பாம்பு ,  
மரண பயம் எல்லாம் சேர்ந்து குரங்கை வாட்டி வதைத்தன. 
“ஐயோ. புத்தி கெட்டுப் போய் 

நானே வலிய வந்து இந்த

 மரண வலைக்குள் மாட்டிக் கிட்டேனே”. 

 

குரங்கு பெரிதாய்க் குரலெழுப்பி ஓலமிட்டது.

நேரம் ஓடிக் கொண்டே இருந்தது . உணவும் , நீரும் இல்லாமல் உடல் சோர்ந்து போய்விட்டது.
 கிட்டத்தட்ட மயங்கி சரியும் நிலைக்கு வந்து விட்டது. கண் இருளத் தொடங்கியது.

*

🌼அந்த நேரத்தில் ஞானி ஒருவர் அந்த வழியே வந்தார். 
குரங்கு இருந்த நிலைமையைப் பார்த்ததும் நடந்ததை உணர்ந்து கொண்டார். குரங்கை நெருங்கி வந்தார்.

*

🌼சொந்தங்களெல்லாம் கைவிட்டுவிட்ட நிலையில் , தன்னை நோக்கி மனிதர்ஒருவர் வருவதைக் கண்ட குட்டிக் குரங்கிற்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது. 
அவர் நெருங்கி வந்து சொன்னார் ,” எவ்வளவு நேரந்தான் பாம்பைக் கையிலேயே பிடிச்சிக்கிட்டு கஷ்டப்படப் போற? அதைக் கீழே போடு” என்றார்.
🌼குரங்கோ ,”ஐயய்யோ , பாம்பை நான் விட்டுட்டா அது என்னக் கொன்னுடும் ” என்றது. 

 

அவர் மீண்டும் சொன்னார் ,” பாம்பு செத்து ரொம்ப நேரமாச்சு. அதைக் கீழே வீசு “.அவர் வார்த்தயைக் கேட்ட குரங்கு பயத்துடனே பிடியைத் தளர்த்திப் பாம்பைக் கீழே போட்டது. 
அட . நிஜமாகவே பாம்பு ஏற்கனவே குரங்குப் பிடியில் செத்துதான் போயிருந்தது. அப்பாடா .

*

🌼குரங்குக்கு உயிர் வந்தது . அவரை நன்றியுடன் பார்த்தது .”இனிமே இந்த முட்டாள் தனம் பண்ணாதே ” என்றபடி ஞானி கடந்து போனார்.
*

🌼நம்மில் எத்தனையோ பேர் மனக்கவலை என்ற செத்த பாம்பைக் கையில் பிடித்துக் கொண்டு விட முடியாமல் கதறிக் கொண்டிருக்கிறோம்.
🌼கவலைகளை விட்டொழியுங்கள்.

*******

🌼மகிழ்ச்சியாய் இருங்கள், , ,
 🌼ஒவ்வொரு கெட்ட குணங்களும் ஒவ்வொரு நோயை உருவாக்கும்
🌼பெருமையும் கர்வமும் இதய நோய்களை உருவாக்கும்
🌼கவலையும் துயரமும் வயிற்று நோய்களை உருவாக்கும்
🌼துக்கமும் அழுகையும் சுவாச நோய்களை உருவாக்கும்
🌼பயமும் சந்தேகமும் சிறுநீரக நோய்களை உருவாக்கும்
🌼எரிச்சலும் கோபமும் கல்லீரல் நோய்களை உருவாக்கும்
🌼அமைதியை விரும்புவதே அனைத்தையும் குணமாக்கும்.
🌼ஆரோக்கியமான உடலிலிருந்தே ஆரோக்கியமான சிந்தனைகள் பிறக்கும். உடலின், மனதின் தேவைகளுக்கு மதிப்பளியுங்கள்.
🌼பசிக்கும் போது உணவருந்துங்கள். 
பசியை நீங்கள் புறக்கணித்தால் பசி உங்களைப் புறக்கணிக்கும். 
எப்போதும் உடலின் அழைப்பை புறக்கணிக்காதீர்கள்.    

உற்சவங்கள்

தமிழகத்தின் பெரும்பாலான கோவில்களில்
உற்சவங்கள் –
பங்குனி
சித்திரை
வைகாசி லேயே நடைபெறுகிறது!

சித்திரை – மீனாட்சி திருக்கல்யாணம்,
கள்ளழகர் தொடங்கி,
வைகாசி விசாகம்
தைப்பூசம்
மாசி மகம்
பங்குனி உத்திரம்

வறட்சி – வெயில் அதிகம் உள்ள
காலகட்டத்தில், விவசாயம் இல்லாத நேரத்தில்
மனிதனின் மனங்களில் உற்சாகத்தை
ஏற்படுத்தவே உற்சவங்கள்!
மகிழ்ச்சியை ஏற்படுத்தவே
திருவிழாக்கள்!

அப்போதெல்லாம் 6மாதங்கள் மழை பொழிந்திருக்கிறது! ( நல்லவர்கள் அதிகம் இருந்தனர்)
ஆடிமாதத்தில் அம்மனை வழிபட்டுவிட்டு
விதைவிதைக்க சென்றுவிடுவர்.
( ஆடி பட்டம் தேடி விதை)

சித்திரை மாதத்தில் (மே) கேரளாவில்
மழை பொழிந்து,
வைகாசி – ஆனியில் (ஜுன் – ஜூலை)
கர்நாடகத்தில் மழை பொழிந்து தமிழகத்திற்கு
தண்ணீர் அதிகமாக வந்து கொண்டிருந்தது!
( இப்போது பக்கத்து மாநிலம்
அப்போது பக்கத்து நாடு! தமிழனின்
துரதிர்ஷ்டம், பக்கத்து மாநிலங்கள்
அன்றும் – இன்றும் – எப்போதும் நமக்கு
அண்டை நாடுகளாகவே இருக்கின்றன!
அதிகமாக வந்து கொண்டிருந்த தண்ணீரை அணைகளை கட்டி தடுத்தி நிறுத்திவிட்டனர்!
நல்ல மனம் வாழ்க!)

சித்திரை – வைகாசி – ஆனியில் அங்கிருந்து வரும் நீரின் மூலம் விதைவிதைத்து
தயாராவோம்!  ( நம்மிடமுள்ள ஏரி – குளங்களில் உள்ள சேமிப்பின் மூலமும்)

ஆவணியில் நமக்கு மழை வந்துவிடும்!
ஆவணி தொடங்கி மார்கழி பாதிவரை
மழை தொடரும்!  ( இப்போது ஐப்பசியில் ஒரு வாரத்திற்கு மேல் மழையை காண முடியவில்லை!)
மார்கழியில் துவங்கி தை – மாசி வரை
அறுவடை காலம்! ( 90நாள் குறுவை சாகுபடி எல்லாம் பின்நாளில் வந்ததே!)

விவசாயம் மூலம் கிடைத்த
பொன்(பணம்)மூலம்  தைப்பொங்கல் – அறுவடைத் திருநாள் – தமிழர் பண்டிகை
கொண்டாட்டம் ஆரம்பம்!

பொன் கிடைத்தவுடன் பெண்ணிடமும் – மதுவிடமும் சென்றுவிடுவான் என்று அறிந்தே,
அந்நாட்களில்,
மனம் சஞ்சலமடையும் போது
மனதை திருப்ப
திருவிழாக்கள் – உற்சவங்கள் பண்டிகைகளை, பக்தியின் பெயரால்
திருப்பிவிட்டனர். ( ‘பெரியார் பக்தர்கள் கவனிக்க)

நான்கைந்து மாதங்கள் விவசாய வேலை பெருமளவில் இல்லாமல் இருந்ததும்,
உற்சவங்கள் – திருவிழாக்கள் அதிகம்
நடந்ததற்கு ஒரு காரணமாகும்!
( இன்று நாம் What’sAppல் கண்டு ரசித்திடும்??!!  அனைத்து விஷயங்களையும், ஒரு திருவிழாவில்
கண்டு களித்திருந்தனர் – அப்போது)

பழைய பஞ்சாங்க மேட்டர்!
உத்தராயணம் – தை முதல் ஆனி வரை
த௸ணாயணம் – ஆடி முதல் மார்கழி வரை!
ஆக இரண்டு பருவங்கள்!

வடக்கில் இருந்து த௸ணாயணம் காலத்தில் அதிக பண்டிகைககள்,
தமிழகத்திற்கு இறக்குமதி ஆகி உள்ளது!

ஆடி மாதம் வரலட்சுமி விரதம் தொடங்கி,
ஆவணி விநாயகர் சதுர்த்தி, கோகுலாஷ்டமி
புரட்டாசி விஜயதசமி,
ஐப்பசி தீபாவளி ( நமக்கு அதிகம் விடுமுறை கிடைக்கும் பண்டிகைகள் அனைத்தும் இந்த த௸ணாயணம் காலத்திலேயே ஆடி முதல் மார்கழி வரை)

கவனிக்க!
இன்றும் தமிழக உள்மாவட்டங்களில், பெரிய சிலைகள் வைத்து, சென்னையை போல
விநாயகர் சதுர்த்தி ( #கணேஷ் HBD) கொண்டாட படுவதில்லை!
இவையெல்லாம் பெரும்பாலும் இறக்குமதி ஆனவைகளே!

கார்த்திகை மாலை அணிந்து ஐயப்பன் ஃபேஷனும் சென்ற நூற்றாண்டில்
வந்தவையே! 
( தென்பழனி திருப்திக்கும்
ஸ்ரீரங்கம் போவதற்கும் சில்லறையை போட்டுவைப்பான் தேதி 1 லே!
கடவுள் மறுப்பாளர் N.S.கிருஷ்ணன் பாடல் வரிகள்!)

நமது உற்சவங்கள் – திருவிழாக்கள் பெரும்பாலும் உத்ராயணம் காலத்திலேயே
தை முதல்  ஆனி வரை

த௸ணாயணம் காலத்தில் ஆடி முதல் மார்கழி வரை, நாம் உழைக்க சென்றுவிடுவோம்!

ஒவ்வொரு போரின் போதும் அங்கிருந்து வந்தவர்கள், இங்கு ‘ க ல ந் து ‘ உருவானவைகள்
பல பண்டிகைகள்!
பழந்தமிழர்கள் இவைகளை கொண்டாடியதே இல்லை!
தமிழனின் சுத்த பண்டிகை தைப்பொங்கல்!
( நாம் அனைவரும் தைப்பொங்கல் கிராமத்தான் பண்டிகை ஆக்கிவிட்டோம்!
தற்போது, ஹோலியும் – தீபாவளியும் சில நேரங்களில் கிருஸ்துமஸ் மட்டுமே
அதிக கொண்டாட்டத்துடன் செய்து வருகிறோம்! )

எத்தனை மனிதர்கள் – எத்தனை போர்கள் – எத்தனை கலாச்சார நுழைவுகள்!
அத்தனையும் தனதாக்கி கொண்டான் – தமிழன் !

சுவரில் மாறிமாறி வண்ணம் பூசுவது போல், வரலாறு மாறிமாறி அவன்மீது
எழுதப்பட்டிருக்கிறது!
இதில் நாம் கர்வபடக்கூடிய ஒரே விஷயம்!

தமிழன் – தன் மீது எந்த வண்ணம்
பூசினாலும் ஏற்றுக் கொண்டிருக்கிறான்.
தன் தாய் மொழி  – தமிழ் மீது
கருப்பு வண்ணம் பூசப்படாமல் பாதுகாத்திருக்கிறான்!

தமிழால் இணைந்திருக்கிறோம்!
வாழ்க – வளர்க தமிழ்!  ( தமிழனும்…)

🌹🌷💐🍁🌸🌹🌷💐🍁🌸🌹🌷💐🍁

முன்  குறிப்பு :
இப்போது நுனிப்புல் மட்டுமே மேய்ந்திருக்கிறேன்!
நேரமும் – வாய்ப்பும் – தமிழும் கலந்தால்
மீண்டும்.,
இதைப்பற்றி கொஞ்சம் கூடுதலாக
பேசலாம்!

பின் குறிப்பு :
இவ்வளவு நேரம் தூக்கம் வராமல் படித்த
உங்கள் கண்களுக்கு ஒரு பல்லாண்டு பாடி,
உங்கள் பொறுமைக்கும் ஒரு பல்லாண்டு பாடி!
என் நெஞ்சார்ந்த நன்றியை
தெரிவித்து கொள்கிறேன்!

அன்புடன் பாரதீ
N.BHAARATHI 💓💓💓

எண்ணங்களின் சரக்குமண்டி!

எதைப்பற்றி எழுதலாம்?
(அ)    எழுதுவேன்!

உப்பு அதிகம் போட்டு கொள்வதினால்,
சூடும் – சுரனையும் அதிகம் உள்ளதாலும் (BloodPressure-ம்)
பாதித்த விஷயங்களை பகிர்ந்து கொள்வேன்!

( யாரைப்பற்றி முதலில் எழுத என்பதை
தனியாக – விரிவாக வேறொரு இடுகையில்…)

சத்தியமாக சினிமா விமர்சனம்
செய்யமாட்டேன்!
( தமிழிலேயே ஒருலட்சம் Blog-களுக்கு மேல்
சினிமா விமர்சனம் செய்வதையே
லட்சியமாக?!  கொண்டுள்ளதால்…)

( இந்த 1,76,000 கோடி ‘படம்’ வந்ததுலயிருந்து, எதை பேசினாலும்
லட்சத்துக்கு மேல்தான்!)
ஆனால்.,
சினிமா இல்லாமல் தமிழக அரசியலே
இல்லை ( தமிழனும் ) என்பதனால்…
அதைப்பற்றியும் பேசுவோம்!
( ‘வோம்’ – போட்டு உங்களையும் சேர்த்து கொள்கிறேன்! )

நாலடியார் – நான்மணிக்கடிகை
பதிற்றுப்பத்து – பரிபாடல்
கலித்தொகை – கலிங்கத்துப்பரணி
நற்றிணை – குறுந்தொகை
ஐங்குறுநூறு – இன்னா நாற்பது
இந்த பக்கமே எட்டிப்பார்க்கமாட்டேன்!
( கடல் அலையில் கூட நீந்தலாம்!
ஆழீப்பேரலையில் யார் நீந்துவது?! )

வள்ளலாரையும் – ராமாநுஜரையும்
அறிவதற்கு முன்னரே, நான் ஒரு
110% சைவபட்சி!
ஆதலால்,
KFC பற்றியோ
திண்டுக்கல் தலாப்பாகட்டு பிரியாணி பற்றியோ..!
No Comments!

பன்னாட்டு குளிர்பானங்கள் அதிகமாக
குடித்ததினால் ( only Softdrinks தாங்க)
பல் எனாமல் போனவர்களில், நானும்
ஒருவன்!
பல் போனாலும், என் தமிழின்
சொல் போகவில்லை!
அட!
இதைப்பற்றியும் பேசுவேன்!

புரட்சி பற்றியெல்லாம் பேசி,
உங்களை பயமுறுத்தமாட்டேன்!
புரட்டாசி பற்றி வேண்டுமானால்
பேசுவேன்!

லியோ டால்ஸ்டாய் பற்றி பேசவா?
( Tortoise பற்றியே தெரியாது, இதில்
டால்ஸ்டாய் எங்கே என்கிறிர்களா? )

காரல் மார்க்ஸ் – பிரெடரிக் எங்கெல்ஸ்
அல்லது,
கலீல் ஜிப்ரான் பற்றி பேசுவோமா?

ஜே.கே பற்றியும் பேசுவோம்!
( K.B யின் JKB பற்றியும் கொஞ்சம்
பேசுவோம்! )

தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதையர்
பற்றி பேசலாமா?
( விகடன் தாத்தா பற்றியும் )

தமிழின் முதல் சிறுகதை எழுதிய
வ.வே.சு. அய்யரின் “குளத்தங்கரை அரசமரம் ” பற்றி பேசுவோமா?
( முதல் சிறுகதை பற்றி மாறுபட்ட கருத்தும்
நிலவுகிறது. மகாகவி பாரதி எழுதியதே
தமிழின் முதல் சிறுகதை என்று…
பாரதி’அய்யர்’ என்று பெயர் போட்டிருந்தால்,
முதல் சிறுகதைக்கு – அவரின் பெயரை
‘டிக்ளர்’ செய்திருப்பார்களோ என்னவோ?!
இதைப் பற்றியும் பேசுவோம்!)

மீள்கோட்பாடு – மார்க்சியம்
பின் நவீனத்துவம் – சூஃபியிஸம்
பாசிசம் – பின் அமைப்பியல்
இப்படியெல்லாம் பேசி பயமுறுத்தமாட்டேன்!

அல்லேலூயா பற்றியோ
அல்லோலபதி ஆங்கில வைத்தியம்
பற்றியோ பேசமாட்டேன்!
சித்தர்களை பற்றி பேசமாட்டேன்! ஆனால்,
பித்தர்களை பற்றி,
“எத்தத் திண்ணா
பித்தம் தெளியும்”
பித்தம் தலைகேறியவர்களை
பற்றி பேசுவேன்!

சநாதன தர்மம் பற்றி பேசுவேன்!
என் மதம் உயர்வு என்று அறிந்தவன்!
ஆனால்,
என் மதம் மட்டுமே உயர்வென்று
‘மதம்’ – பிடிக்காதவன்!
ராமநுஜரை பேசும் போது
பெரியாரையும் பேசுவேன்!
ஆனால்,
( பரிசுத்த ஆவியில் இட்லி வேகுமா?
என ‘அவர்களைப்போல்’ – கேட்கமாட்டேன்!)

( இந்த பிடிக்காதவன் – கேட்கமாட்டேன்!
எல்லாம் உண்மையில் ஊலுலூலாலா…!)
ஏனென்றால் நாம் Secular & Socialist Country
அதனால்,
இந்த கர்மத்தையெல்லாம்
சொல்ல வேண்டியிருக்கிறது!

முடிந்தவரை
அறிந்தவரை
படித்தவரை
பிடித்தவரை
தெரிந்தவரை..,
சூரியனுக்கு கீழ் உள்ள
அனைத்தை பற்றியும்
பேசுவோம்!
சூரியனுக்கு அப்பால் உள்ளதை
இஸ்ரோ – நாசாவிடம் விட்டுவிடுவோம்!

#10

Terms & Conditions 2

கத்தியோடு வருபவருக்கும்
சாமரம் வீச காத்திருக்கிறேன்!

கருத்தில் பிழையிருந்தால்
மாற்றமுடியாது!
எழுத்தில் பிழை இருந்தால்
மாற்றிக்கொள்கிறேன்!

திமிர் அல்ல ; தெளிவு!

வாழ்க விளம்பரங்கள்!

” அங்கிள் நீங்க Brush பண்ணீட்டீங்களா? ”

” இல்லையேம்மா ”

” நீங்க Brush பண்ணியிருந்தாதான்
நான் Kiss கொடுப்பேன்! ”

” இல்லன்னா கொடுக்கமாட்டியாம்மா? ”

” ம்ம்மூம்..! ”

” ஏம்மா ”

” நீங்க டிவியில Addயே பாக்கமாட்டீங்களா ”
-என்றது பக்கத்துவீட்டு குழந்தை!

‘நெருங்கி வருவாய்
நெருங்கி வருவாய்!
சுவாசத்திலே..! ‘
என்ற விளம்பரம் ஞாபகம் வந்தது!

இன்றைய விளம்பர உலகில்
பல் துலக்குவது ஆரோக்கியத்திற்காக
மட்டுமல்ல!
முத்தம் கொடுப்பதற்காகவும்
என்றே மாறிவிட்டன!

20 வருடங்களுக்கு முன்
தூர்தர்ஷனை
கண்டுகளித்தவர்களுக்கு தெரியும்!
அதில்,
அதிகமாக வந்த 2 விளம்பரங்கள்
வாஷிங் பவுடர் நிர்மா…
மற்றொன்று வீக்கோ Paste!

இப்போது கூட அதனை அரிதாக
காணலாம்!
அதில் ஒருவர்
பல் ஆரோக்கியத்தை நிருபிக்க
பாதாம் காயை முழுவதுமாக
கடிப்பார்!
மற்றொருவர் சர்க்கரை கரும்பை
கடிப்பார்! (பன்னீர் கரும்பல்ல…)
பல் ஆரோக்கியத்தை காட்ட…

இன்றோ!
முத்தம் கொடுப்பதற்காக
பற்பசை விளம்பரங்கள்!
(முத்தம் கொடுப்பதற்கு ஆரோக்கியமான
சுவாசம் தேவைதான்!
ஆனால்,
முத்தத்திற்கு மட்டுமேவா பற்பசை?!)
நிற்க…

‘அத்தரும் ஜவ்வாதும் அள்ளியேபூசிடினும்
அங்கம் மணக்கவில்லையே…’
பாடல் உங்களுக்கு தெரியும்!

வியர்வை நாற்றமும்
அக்குள் நாற்றமும்
பொது இடங்களில்
நாம் செல்லும்போது
அந்த நாற்றம், மற்றவர்களுக்கு
ஒருவித சங்கடத்தை
ஏற்படுத்தாமல் இருக்கவே
Deodorantகளும் – வாசனை திரவியங்களும்!

இன்றோ!
விளம்பர உலகில் Perfumeயை
போட்டவுடன்,
கூடலுக்கு இழுத்து கொள்கின்றனர்
பெண்கள்!

இதனை எந்த
பெண்கள் இயக்கமும்,
மாதர் சங்கங்களும்
கண்டிக்கவேயில்லை!

விளம்பரத்திற்காக வழக்கு போடும்
வழக்கத்தை வைத்துள்ள
எந்த ” நாதாரியும் ”
இந்த விளம்பரங்களுக்காக
வழக்கும் போடவில்லை!

வாழ்க்கையின் இடையில்
விளம்பரங்கள் வந்து
கொண்டிருந்தன்!

இப்போது,

விளம்பரங்கள் இடைவெளியில்
வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!

வாழ்க விளம்பரங்கள்!

(முன் குறிப்பு :
மேலே உரையாடலில்
பக்கத்து வீட்டு குழந்தை என்று
குறிப்பிட்டுயிருந்தேன்!
பக்கத்து வீடோ – எதிர் வீடோ
இப்போது,
எந்த குழந்தையும் வெளியிலேயே
விளையாட வருவதில்லை!
சோட்டா பீம்மும் – டோராமென்னும்
அவர்களின் நேரத்தை
சாப்பிட்டு கொண்டிருக்கின்றன!)